தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு மொத்தம் 1500 கோடி ரூபாய் செலவில் 5000 புதிய பேருந்துகளை வாங்க அரசாணை வெளியிடப்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1001 கோடி ரூபாய் செலவில் 3381 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று 159 கோடி ரூபாய் மதிப்பிலான 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
சென்னை மாநகர போக்குவரத்திற்கு 100 பேருந்துகள், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 150 பேருந்துகள், நெல்லை, கோவை, சேலம், மதுரை, கும்பகோணம், விழுப்புரம் ஆகிய 6 கோட்டங்களுக்கு 250 புதிய பேருந்துகள் என மொத்தம் 500 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தமிடப்பட்ட 16 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
தொழில்துறை அமைச்சர் எம்சி சம்பத் உள்ளிட்டோர் இருந்தனர். 2515 கோடி ரூபாய் முதலீட்டிலான இந்த நிறுவனங்கள் முலம் மூலம் 9 ஆயிரத்து 304 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
WhatsApp us