சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பதிலுரை அளித்தப்பின், 28 புதிய அறிவிப்புக்ளை வெளியிட்டார். அதில் சேலம் மாவட்டத்தில் நாட்டுக்கோழி இன விருத்தி பண்ணை 48 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்றும் இதன் மூலம் 20 லட்சம் நல்ல தரமான அசல் இன நாட்டுக்கோழி குஞ்சுகள் மற்றும் 2000 மெட்ரிக் டன் தரமான தீவனமும் உற்பத்தி செய்யப்படும் என அறிவித்தார்.
மேலும் இதுவரை கிராமங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த விலையில்லா நாட்டுகோழித்திட்டம் பேரூராட்சிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 528 பேரூராட்சிகளில் 47,500 பெண்களுக்கு
தலா 25 நாட்டுக் கோழி குஞ்சுகள் வழங்கப்படும் என்றும் கிராமப்புறத்தில் 1, 92, 500 பெண்களுக்கு தலா 25 நாட்டுக் கோழி குஞ்சுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழகம் முழுவதும் 2.40 லட்சம் பெண்களுக்கு 60 லட்சம் நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கப்படவுள்ளன.
இதன் மூலம் உடலுக்கு நலம் தரும் நாட்டுக்கோழி விற்பனையில் ஈடுபட்டு ஏழை எளிய பெண்கள் தங்களது வாழவாதாரத்தை உயர்த்திக் கொள்ள வழி பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
