25 குழந்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடி, பாடகர் சோபனா விக்னேஷ் பாரதியார் பாடல் பாடினார், மேலும் நடனம் , கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நிறைந்த 2-ம் உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் இன்று துவங்கியது.
பல்வேறு முக்கிய தொழிலதிபர்கள், அமைச்சர்கள், அந்நிய முதலீட்டாளார்கள் இந்த மாநாட்டில் பங்குபெற்றனர்.
இந்த மாநாட்டில் மிக முக்கியமான தமிழ்நாடு வானூர்தி மற்றும் தொழில் பாதுகாப்பு கொள்கையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டார். பல நூற்றாண்டுகளாக தொழித்துறையில் முன்னணி இடம் வகிப்பது தமிழ்நாடு என்றும், உலக முதலீட்டாளர் மாநாடு என்பது ஒரு நல்ல முயற்சி என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
”கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வருவதாக IMF அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் தொழில் தொடங்க உகந்த மாநிலம்.
தமிழக மாணவர்கள், ஜப்பானிய மொழியான மாண்டரின் மொழி, கொரியா மொழி உள்ளிட்டவற்றை கற்றுக்கொள்ள வேண்டும்
. ராணுவ தளவாடங்களை பெறுவதில் இந்தியா மிகப்பெரிய நுகர்வோராக உள்ளது.
உலகத்தரத்திலான ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்காக Defence Corridor கொண்டுவரப்பட்டுள்ளது
. தமிழகத்தில் வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்தியில் யார் முதலீடு செய்ய முன்வந்தாலும், அவர்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் ” என்றார் நிர்மலா சீத்தாராமன்
மேலும் அவர் சென்னை, ஓசூர் , சேலம் உள்ளிட்ட பகுதிகளில் ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட அந்நிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
– யமஹா நிறுவனம் ரூ.1,500 கோடி அளவிற்கு தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. ரூ.1,500 கோடி அளவிற்கு முதலீடு செய்வதன் மூலம் 4,700 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
– அதானி குழுமம் சார்பில் ரூ.12 ஆயிரம் கோடியில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது என்று சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் கரண் அதானி கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஓராண்டாக தொழில் முதலீடுகள் செய்வதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது
– முதல்வர் எடப்பாடி பழனிசாமி .
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் 8.5 சதவீத பங்கை தமிழ்நாடு செலுத்துகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், சென்னை சோழிங்கநல்லூரில் ஃபோர்ட் தொழில்நுட்ப நிறுவனத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டை மிகப்பெரிய உற்பத்திமையமாக மாற்றுவதே உலக முதலீட்டாளர் மாநாட்டின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.அதனையடுத்து மேக் இன் இந்தியா போல் மேக் இன் தமிழ்நாடு உருவாகி வருகிறது என்று டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் அக்டோபர் மாதம் முதல் சென்னையில் இருந்து ஜப்பான் நாட்டிற்கு நேரடி விமான சேவை துவங்க உள்ளதாக ஜப்பான் தூதர் தெரிவித்துள்ளார். இந்த சேவை மூலம் சென்னைக்கும், ஜப்பானுக்கும் நேரடி தொடர்பு ஏற்படும். மேலும் ஜப்பான் சார்பில் தமிழகத்தில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளதாக ஜப்பான் நாட்டு தூதர் தெரிவித்துள்ளார். ஜப்பானிற்கு நேரடி விமான சேவையில் டெல்லி , மும்பைக்கு அடுத்ததாக இந்தியாவிலே மூன்றாவது இடமாக சென்னை அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
