சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைய கேரள உயர் நீதிமன்றம் அனுமதியளித்ததில் இருந்து கேரள மாநிலம் முழுவதும் மிக பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன இந்நிலையில் பெண்களுக்கு அனைத்து இடங்களிலும் சம உரிமை அளிக்கும் பொருட்டே நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
மும்பையை சேர்ந்த பெண்கள் உரிமை மீட்பு இயக்கத்தை சார்ந்த 3 இஸ்லாமிய பெண்கள் கேரளாவில் உள்ள வாவர் மசூதிக்குள் சென்று தரிசிக்க உள்ளதாகவும் அதற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி கேரள மாநில அரசிற்கு கடிதம் எழுதினர்.
கேரளாவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருவதால் தற்போது பாதுகாப்பு அழிக்கமுடியாது என்றும் பெண்கள் வாவர் மசூதிக்குள் சென்று தரிசனம் செய்வது குறித்து வாவர் மசூதி நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி பெண்கள் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்தது கேரள அரசு.
கேரள அரசு சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் ஒரு விதமாகவும் வாவர் மசூதி குறித்த பெண்கள் கோரிக்கையை வேறு விதமாகவும் அணுகுவது ஐயப்பன் கோவில் நிர்வாகத்தை சீர்குலைக்கவே பினராயி விஜயனும் கம்யூனிஸ்ட் அரசும் செயல்படுவதாக கூறும் எதிர்க்கட்சிகள் மற்றும் இந்து அமைப்புகளின் கோரிக்கைகளில் உண்மை இருப்பதாகவே தோன்றுவதாக கேரள மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
