கேரளாவைச் சேர்ந்த, ரஹானா பாத்திமா, 29, அதிரடிப்படை சீருடை, ஹெல்மெட் அணிந்து, அய்யப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்றார். பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக, அவரால், கோவிலுக்குள் நுழைய முடியவில்லை.
இந்நிலையில், ரஹானா பாத்திமா, பேஸ்புக் பக்கத்தில், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் வேலை செய்து வந்த பிஎஸ்என்எல் நிறுவனம் ரஹானாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
