மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்.
கர்நாடக மாநிலம் மேகதாது என்ற இடத்தில் ரூ. 5600 கோடி செலவில் அணை கட்ட அரசு முடிவு செய்தது. அதன்படி வரைவு திட்ட அறிக்கை தயார் செய்து மத்திய நீர் வள ஆணையத்திடம் சமர்ப்பித்தது.அந்த ஆணையமும் மேகதாதுவில் ஆய்வு செய்யுமாறு கர்நாடக அரசுக்கு ஒப்புதல் அளித்துவிட்டது. இதை தமிழக அரசு வன்மையாக கண்டித்தது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. இந்நிலையில் மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனித் தீர்மானம் கொண்டு வருகிறார்.கர்நாடக அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகிறது. அனுமதி வழங்கிய மத்திய நீர்வள குழுமத்துக்கு கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
அது போல் அனுமதியை திரும்பப் பெற மத்திய நீர்வள அமைச்சகம் உத்தரவிட சிறப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்படவுள்ளது. இதற்காக இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி தலைமையில் சட்டசபை கூடுகிறது.
