மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முஹம்மத் ஜான், மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பாமகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலங்களவைக்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடும் 3 இடங்களில், ஒரு இடம் ஏற்கெனவே செய்து கொண்ட உடன்பாட்டின்படி, பாமகவுக்கு ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த, அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான முஹம்மத் ஜான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல, சேலம் மாவட்டத்தை சேர்ந்த, மேட்டூர் நகர அதிமுக செயலாளர் என்.சந்திரசேகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
