மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் இரண்டாவது நாளாக மழை வெளுத்து வாங்குகிறது.
புனேவில் அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் இருந்த குடிசைகளில் வசிக்கும் 15 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று தானே உள்ளிட்ட இடங்களில் இரண்டு மணி நேரமாக கனமழை பெய்தது.
புனேயில் மழை பெய்ததால், அடுக்குமாடி குடியிருப்பின் 60 அடி சுற்றுச் சுவர் இடிந்து தரைமட்டமானது.இந்த விபத்தில் அருகில் இருந்த குடிசைவாசிகள் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கிய உடல்களை மீட்கும்பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மும்பையில் நேற்று ஒரே நாளில் மழை பாதிப்பு காரணமாகவும், மின்சாரம் தாக்கியும் 8 பேர் உயிரிழந்தனர். பல்வேறு இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்ததில் ஆட்டோ, கார்கள் இடிபாடுகளில் சிக்கின.
இதனிடையே குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறு போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
WhatsApp us