சென்னை விமான நிலையத்தில் செய்தியாளார்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசினார்.
மேகதாது அணை கட்ட முதற்கட்ட ஆய்வு பணிக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது கண்டிக்கத்தக்கது. இது உச்சநீதிமன்றத்துக்கு எதிரானது.இது தமிழகத்துக்கு மத்திய அரசு செய்துள்ள துரோகம். உடனடியாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்துக்கு சென்று தடை வாங்க வேண்டும். தமிழகத்தில் 5 கோடி மக்கள் காவிரி நம்பி உள்ளனர். அணை கட்டினால், தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்.இது மத்திய அரசின் தேர்தலுக்கான நாடகம். மக்களவை, மாநிலங்களைவை உறுப்பினர் எதிர்க்க வேண்டும் என கூறினார்.
மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை இதுவரை, பிரதமர், உள்துறை அமைச்சர் அல்லது மூத்த அமைச்சர்கள் என யாரும் நேரடியாக வந்து பார்த்து மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வில்லை. தமிழகம் இந்தியாவில் தான் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது எனவும் கூறினார்.
20 பகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்காது நாடாளுமன்றத் தேர்தலில் தான் நடக்கும்.மழை,புயல்,மார்கழி மாதத்தில் பணி,தேர்வுகள் மற்றும் கோடை காலம் என தொடர்ச்சியாக தேர்தல் தள்ளி வைக்கப்படும். தேர்தல் என்றால் இந்த அரசுக்கு அலர்ஜி.தோல்வி அடைவார்கள் என பயம் என்று தமிழக அரசை அன்புமணி ராமதாஸ் விமர்சித்தார்.
