தமிழகத்தில் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து டாஸ்மாக் கடைகளில் ஸ்வைப் இயந்திரம் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம் கூடுதல் விலைக்கு மது விற்பனை, கடை ஊழியர்களை தாக்கி கொள்ளையடிப்பது போன்றாவற்றை தடுக்க முடியும் என டாஸ்மாக் நிறுவனம் நம்புகிறது. ஸ்வைப்பிங் கருவி வாங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ள நிலையில், வங்கி அதிகாரிகளை வைத்து, அந்த கருவி பயன்பாடு குறித்து மதுக்கடை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
