சுகாதாரத் துறையில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்கு பின்தங்கியுள்ளதாக நிதி ஆயோக் அமைப்பு தவறான தகவலை வெளியிட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னையில், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், நிதி ஆயோக்கின் கணக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மத்திய அமைச்சரவைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
