சாலைகளில் உள்ள பள்ளங்களில் விழுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, எல்லையில் பயங்கரவாதிகளால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாக சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா, ஹேமந்த் குப்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, இதனால், 2013 முதல் 2017 வரை 14, 926 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை ஏற்க முடியாது. கவலை அளிப்பதாக உள்ளது. சாலைகளில் உள்ள பள்ளங்கள் காரணமாக உயிரிழப்பு ஏற்படுவது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலைகள் பராமரிப்பில் கவலையில்லாமல் இருப்பதை காட்டுகிறது எனக்கூறி, மத்திய அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.
