சபரிமலை கோயில் நிர்வாக பிரச்னை தொடர்பாக பந்தளம் ராஜ குடும்பத்தினர் தொடுத்த வழக்கு மீது நேற்று உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது.
அப்போது ஐயப்ப பக்தர்களின் நலன்கள் தொடர்பான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி, சபரிமலை கோயில் நிர்வாகம் தொடர்பாக தனி சட்டம் உருவாக்கும்படியும், அதுதொடர்பான விரிவான அறிக்கையை ஜனவரி 3ஆவது வாரத்தில் தாக்கல் செய்யும்படியும் கேரள அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
கேரள அரசு தரப்பில் கோயில்கள், அதன் நிர்வாகம் தொடர்பான சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் வகுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
