மேற்குவங்க மாநிலத்தில் மேஜிக் செய்வதாகக் கூறி, கை, கால்களை கட்டியபடி நீரில் இறங்கியவர் ஒரு நாளுக்கு மேலாகியும் வெளியே வராததால் அவர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
கொல்கத்தாவில் சில ஆண்டுகளுக்கு முன் நீரின் மீது நடப்பதாகக் கூறி சாகசம் புரிய நினைத்த சஞ்சால் லஹிரி, அந்த முயற்சியில் தோற்றதால் பார்வையாளர்களின் கோபத்துக்கு ஆளானார். 2002-ம் ஆண்டு தோட்டா துளைக்காத கண்ணாடி கூண்டுக்குள், நீர் புகக்கூடிய வட்ட ஓட்டைகளுடன் 36 பூட்டுக்களை பூட்டி நீரில் இறங்கிய சஞ்சால், வெளியேறினார்.
அதே போன்று 2013-ல் அவர் கம்பிக் கூண்டில் அடைத்தபடி நீரில் இறங்கி, 29 நிமிடங்களில் வெளியேறியபோது, அவர் இரு ஆணிகளை நீக்கி கதவைத்திறந்து எளிமையாக வெளியேறி ஏமாற்றியதைப் பார்த்துவிட்டதாக பார்வையாளர்கள் அவரைத் தாக்கினர். இந்நிலையில், ஞாயிறன்று கை, கால்களை சங்கிலி, கயிறால் கட்டி, நீரில் இறங்கினார். ஆனால் திங்களன்று மாலை வரை அவர் வெளியேறாததால் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தான் நீரிலிருந்து வெளியேறி வந்துவிட்டால், மேஜிக், இல்லாவிட்டால் அது சோகமுடிவு என கூறி சென்ற அவரை, மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.
