காஷ்மீரில், பிரிவினைவாத தலைவர்கள் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று, சொந்த செலவுக்கு பயன்படுத்தியதாக தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாத செயல்பாடுகளுக்கு பணம் வந்தது தொடர்பாக, பிரிவினைவாதிகள் சிலரை கைது செய்து தேசிய புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றதை பிரிவினைவாத தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக புலனாய்வு பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பணத்தை தங்கள் குழந்தைகளின் வெளிநாட்டு படிப்புக்கும், சுய வளர்ச்சிக்கும், காஷ்மீர் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டதாக பிரிவினைவாதிகள் வாக்குமூலம் அளித்ததாக தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
