காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டுக் காவலில் இருந்த முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா மற்றும் உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் பிரிவு 370 மற்றும் 35 ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து உமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தலாம் என்ற தகவலையடுத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டு ஹரி நிவாஸ் எனப்படும் அரசு ஓய்வு இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீநகரில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மறு அறிவிப்பு வரும்வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. எந்த அசம்பாவித சம்பவங்களும் நடந்தாக பதிவில்லை என ஸ்ரீநகர் காவல் உதவி ஆணையர் ஷாகித் இக்பால் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
