யோகாவை பூமியின் விளிம்பில் உள்ள கடைசி மனிதனுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
5 வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சியில் இன்று காலை பிரதமர் மோடி பங்கேற்று உரை நிகழ்த்தினார். யோகா நமது கலாசாரத்தின் முக்கிய அம்சம் என்று கூறிய மோடி, யோகாவை இன்று உலகமே கொண்டாடுவதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். விளிம்புநிலையில் உள்ள கடைசி மனிதன் வரைக்கும் யோகாவை கொண்டு செல்ல வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
யோகாவால் உடலுக்கு நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது என்று தெரிவித்த மோடி, யோகாவால் ஏழைகள் கூட பயன் அடைய முடியும் என்று கூறினார். யோகாவை பயிலுவதன் மூலம் மனதுக்கு அமைதி கிடைக்கும் என்றும் மோடி குறிப்பிட்டார். உடல் நலத்துடன் வாழ்வதற்கான திறவுகோலாக யோகா விளங்குகிறது என்றும் கூறிய பிரதமர் யோகா ஒருவகை ஒழுக்கம் என்று தெரிவித்தார்.
பின்னர் நடைபெற்ற யோகாசன நிகழ்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். பல்வேறு ஆசனங்களை செய்தார்.
WhatsApp us