தமிழ்

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா (ஐஐஎஸ்எஃப்) 2019

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளும் விஞ்ஞான பாரதி (விபா) அமைப்பும் சேர்ந்து நடத்தும் வருடாந்திர நிகழ்வு தான் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா (ஐஐஎஸ்எஃப்) 2019 ஆகும். இந்த அறிவியல் திருவிழாவானது, இந்தாண்டு நவம்பர் 5-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை மேற்குவங்கத் தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. 2015-ல் துவங்கப்பட்ட இது 5-வது வருடாந்திர நிகழ்வாகும். ஐஐஎஸ்எஃப் 2019 திருவிழாவின் நோக்கம் என்பது, இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சாதனைகளை மாணவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தொழில்நிபுணர்கள், விவசாயிகள், அறிவியலாளர்கள் ஆகியோருடன் இணைந்து கொண்டாடுவதாகும். உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் அனைத்து இந்தியரையும் அரவணைத்து இது நடப்பதாகும்.  RISEN India என்பதை கருப்பொருளாக கொண்டு இந்த ஆண்டுக்கான விழா நடைபெற உள்ளது. ஆய்வு, புதுமை மற்றும் அறிவியல் மூலமாக தேசத்தை வலுப்படுத்துதல் என்பதே இதன் விரிவாக்கம் ஆகும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சாதனைகளை கொண்டாடுவதில் மாணவர்கள், ஆய்வாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து  நாட்டிலேயே மிகப்பெரிய ஒரு மேடை ஒன்றை அவர்களுக்கென அமைத்து தருகிறது என ஐஐஎஸ்எஃப்-ஐ சொல்லலாம். இளம் உள்ளங்களை அறிவியல் பக்கம் திரும்ப ஊக்கப்படுத்துவதோடு, அறிவியலின் பிரசாரத்திற்காக அவர்களை ஒரு பங்களிப்பவராகவும் உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது ஐஐஎஸ்எஃப்.
ஐஐஎஸ்எஃப்  2019 திருவிழாவில் இந்தியா மற்றும் வெளிநாட்டில் இருந்து ஏறத்தாழ 12000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஸ்வ பங்களா கன்வென்ஷன் சென்டர் மற்றும் கொல்கத்தா அறிவியில் நகரம் ஆகிய இரண்டு இடங்களும் ஐஐஎஸ்எஃப்  2019 திருவிழாவின் முக்கிய நிகழ்விடங்களாகும். சத்யஜித் ரே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி மையம், போஸ் மையம் மற்றும் இந்திய வேதி உயிரியல் மையம் ஆகிய இடங்களிலும் ஐஐஎஸ்எஃப்  2019 திருவிழாவின் ஒருசில நிகழ்வுகள் அரங்கேற உள்ளன.
நவம்பர் 5 முதல் 8 வரையிலான நாட்களில் 28 விதமான நிகழ்வுகளை ஐஐஎஸ்எஃப்  2019  நடத்த உள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்கள் என்ற  www.scienceindiafest.org இணையதளத்தில் உள்ளன. சில முக்கிய நிகழ்வுகள் குறித்து மட்டும் இப்போது பார்ப்போம்.பள்ளி மாணவர்களுக்காக, மாணவர் அறிவியல் கிராமம் ஒன்று ஐஐஎஸ்எஃப் 2019-ஆல் திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து 2500 மாணவர்களுக்கு இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி சன்சத் கிராம் யோஜனா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதியில் இருந்து 5 மாணவர்கள் மற்றும் அவர்களுடன் ஒரு ஆசிரியரை இந்த மாணவர் அறிவியல் கிராமத்திற்காக பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 6 இந்திய விஞ்ஞானிகள் பெயரில் அணிகள் உருவாக்கப்பட்டு, அந்த அணிகளுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு இடையே அறிவியல்பாணி விளையாட்டுக்களும் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நிபுணர்களுடன் உரையாடுவதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்பட உள்ளது.
இந்த திருவிழாவின் மிகப்பெரிய நிகழ்வு என்னவெனில் இளம் அறிவியலாளர் கருத்தரங்கம் ஆகும். கிட்டத்தட்ட 1500 இளம் விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச ஆளுமைகளுடன் உரையாடவும், தங்கள் ஆய்வுகளை சமர்ப்பிக்கவும் மிகப்பெரிய வாய்ப்பு உருவாக்கக்கப்பட்டுள்ளது.
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் திறனை பறைசாற்றும் விதமாக பல்வேறு கண்காட்சிகள் நடைபெற உள்ளன. அதிலும் அறிவியல் நகரத்தில் நடைபெற உள்ள அறிவியல் கண்காட்சி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். நவீனகால தொழில்நுட்பத்தின் கண்காட்சியான திவ்யக்ஞன் கண்காட்சியும் கவரக்கூடிய ஒன்றாகும். புத்தக கண்காட்சியும் பிபிசிசி மையத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஐஐஎஸ்எஃப் 2019-ன் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், விஞ்ஞானிகா அதாவது அறிவியல் இலக்கியத் திருவிழாவாகும். அதுதொடர்பான பல்வேறு நிகழ்வுகளும் நடத்தப்பட உள்ளது.
ஊடகத்துறையினருக்காக இரண்டு நாள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஊடக கருத்தரங்கு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. சால்ட் லேக் பகுதியில் உள்ள போஸ் மையத்தின் புதிய வளாகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அறிவியல் வளர்ச்சி பயணப்பாதையில் பெண் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோரின் பங்களிப்பு என்ற நிகழ்வு இதன் மற்றொரு சிறப்பம்சாகும். பெண் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கானது, பெண்கள் மத்தியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உள்ள வாய்ப்புகள் குறித்தம் புதிய தொழில்முனைவோர்களை மேம்படுத்த உதவும். கிட்டத்தட்ட 700 பெண் விஞ்ஞானிகள் – தொழில்முனைவோர் இதில் கலந்து கொள்வார்கள்.
ஐஐஎஸ்எஃப் 2019 நிகழ்ச்சிகளின் பட்டியல்
வேளாண் விஞ்ஞானிகள் சந்திப்புதுணை தொழில்நுட்பங்கள் கருத்தரங்கு மற்றும் திவ்யக்ஞான் கண்காட்சிஅறிவியலின் புதிய எல்லைகள் என்ற நேருக்கு நேர் நிகழ்வுசர்வதேச இந்திய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நிபுணர்கள் சந்திப்புகின்னஸ் உலக சாதனைசுகாதார ஆய்வு கருத்தரங்கம்தொழில் கல்வித்துறை கருத்தரங்குசர்வதேச அறிவியல் திரைப்பட திருவிழாமாபெரும் அறிவியல், தொழிநுட்ப மற்றும் தொழில் கண்காட்சிதேசிய அறிவியல் ஆசிரியர்கள் மகாசபைதேசிய சமூக அமைப்புகள் மற்றும் மையங்களின் சந்திப்புதேசிய ஸ்டார்ட் அப் கருத்தரங்குநவ பாரத் நிர்மான்நவீனகால தொழில்நுட்ப கண்காட்சிவடகிழக்கு அறிவியில் மாணவர்கள் சந்திப்புதூரதொடர்பு திட்டம் மற்றும் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு நிகழ்வுவெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் தூதர்கள் கருத்தரங்குஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஊடக கருத்தரங்குமாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்கள் கருத்தரங்குமாணவர்கள் பொறியியல் மாதிரி போட்டிமாணவர் அறிவியல் கிராமம்பாரம்பரிய கலை மற்றும் கைவினைஞர்கள் சந்திப்பு மற்றும் கண்காட்சிவிஞ்ஞான் சமகம்விஞ்ஞான் யாத்ராவிஞ்ஞானிகா – சர்வதேச அறிவியல் இலக்கிய திருவிழாஆரோக்கிய கருத்தரங்கு மற்றும் கண்காட்சிபெண் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்குஇளம் அறிவியலாளர் கருத்தரங்கு
கடந்த ஆண்டு நிகழ்வுகளின் சுருக்கம்
ஐஐஎஸ்எஃப் 2015:  ஐஐடி-டெல்லி, புதுடெல்லி. மைய முகமை: டிஎஸ்டிஐஐஎஸ்எஃப் 2016:  சிஎஸ்ஐஆர் – என்பிஎல், புதுடெல்லி, மைய முகமை: சிஎஸ்ஐஆர்ஐஐஎஸ்எஃப் 2017: ஐஐடி-மெட்ராஸ், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் என்ஐஓடி, மைய முகமை: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்ஐஐஎஸ்எஃப் 2018: இந்திரா காந்தி பிரதிஷ்டான், லக்னௌ, மைய முகமை: டிபிடிஐஐஎஸ்எஃப் 2019 – பிபிசிசி மற்றும் அறிவியல் நகரம், கொல்கத்தா, மைய முகமை: டிஎஸ்டி
விஞ்ஞான் பிரசார் என்பது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். ஐஐஎஸ்எஃப் 2019 நிகழ்வை ஒருகிணைக்கும் புள்ளியாக இது செயல்படுகிறது.  www.vigyanprasar.gov.in
துணை நிற்கும் பிற அமைப்புகள்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்சிஎஸ்ஐஆர்டிபிடிஇஸ்ரோடிஏஈடிஆர்டிஓஎம்என்ஆர்ஈஐகேர்மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்ககம்ஐசிஎம்ஆர்மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்ககம்ஏஐசிடிஈஎஸ்ஆர்எஃப்டிஐ
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை பற்றி
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு உட்பட்ட துறைதான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம். 1971-ம் ஆண்டு இந்த துறை உருவாக்கப்பட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் புதிய வாய்ப்புகளை ஊக்கப்படுத்தவும், நாடு முழுவதும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பது, ஒருங்கிணைப்பது, மேம்படுத்துவதே இதன் பிரதான பணிகளாகும். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் அய்வுகளுக்கு நிதியுதவியும் இது அளிக்கிறது. வெளிநாடுகளில் நடக்கும் அறிவியல் கருத்தரங்குகளில் நமது ஆய்வாளர்கள் கலந்து கொள்வதற்கு இந்த துறை உதவி செய்கிறது, அவர்களின் பரீட்சார்த்த முயற்சிக்கும் ஆதரவு நல்குகிறது.

விஞ்ஞான பாரதி பற்றி
விஞ்ஞான் பாரதி அல்லது விபா அமைப்பானது முன்பு, உள்நாட்டு அறிவியல் இயக்கம் என்ற பெயரில் இயங்கி வந்த லாபநோக்கற்ற அமைப்பாகும். அறிவியலை பிரபலப்படுத்துவதும், புதிய தொழில்நுட்பங்களை கையாள்வதும், பாரம்பரிய அறிவியலை மீட்டெடுப்பதும் இதன் பிரதான பணிகளாகும். பெங்களுர் ஐஐடி-யின் புகழ்பெற்ற விஞ்ஞானியான பேராசிரியர் திரு. கே.ஐ. வாசு அவர்கள் இதனை உருவாக்கியவர் ஆவார்.
விஞ்ஞான் பிரசார் பற்றி
விஞ்ஞான் பிரசார் அமைப்பானது, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் தன்னாட்சி பெற்ற ஒன்றாகும். 1989-ல் இது உருவாக்கப்பட்டதன் நோக்கம், பெரிய அளவிலான செயல்பாடுகள் மூலம் அறிவியலை பிரபலப்படுத்துவதாகும். சமூகத்தில் அறிவியல் மற்றும் பகுத்தறிவை முடிந்தமட்டும் கொண்டு போய் சேர்ப்பதும், அதனை ஊக்கப்படுத்துவதும் தான் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் தாரக மந்திரமாகும்.  இதன் பிரதான நோக்கமானது, நிகழ்ச்சிகள் வாயிலாக அறிவியலை பிரபலப்படுத்துவது மற்றும் அறிவியல் சிந்தனையை மக்கள் மத்தியில் வலியுறுத்துவதாகும். அறிவியல் கோட்பாடுகளை அடித்தட்டு மக்களும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் ஒலிவடிவில், காட்சி வடிவில் தயாரிப்பதும் அதனை கொண்டு போய் சேர்ப்பதும் விஞ்ஞான் பிரசாரின் பொறுப்புகளில் ஒன்று. 

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us