காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை நாளை முதல், பக்தர்கள்இலவசமாக தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் திருவிழா இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. அத்திவரதரை தரிசிக்க இலவசமாகவும், ரூ.50 கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அத்திவரதரை தரிசிக்க வசூலிக்கப்பட்ட ரூ.50 கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும், நாளை முதல் பக்தர்கள் இலவசமாக தரிசிக்கலாம் எனவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையன் இன்று அறிவித்துள்ளார்.
