வைர வியாபாரி நிரவ்மோடியின் ஜாமின் மனுவை, 4வது முறையாக லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் கடன்பத்திரங்கள் மூலம் பல்வேறு வங்கிகளில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று மோசடி செய்த நிரவ் மோடி லண்டனில் மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த சிபிஐ மற்றும் அமலாக்கதுறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரவ் மோடி, தனக்கு ஜாமின் கோரி தாக்கல் செய்த மூன்று மனுக்களும் லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து 4வது முறையாக ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனு பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படுவதற்கு முன்பே தான் பிரிட்டன் வந்து விட்டதாகவும், முறையாக வரி செலுத்தியிருப்பதாகவும் நிரவ்மோடி தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அழிக்க நிரவ்மோடி முயன்றதாக கூறி, ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.