திமுக தலைவர் மு க ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அறிவாலயத்தில் சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக சந்தித்து பேசினார்கள்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நான் சந்தித்தேன். இதனை வைத்து பலர் வதந்திகளை பரப்புகின்றனர்.
டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற மாநாடு குறித்து அவரிடம் பேசினேன். கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் கலந்த ஆலோசித்தோம்.திமுகவோடு விடுதலை சிறுத்தை கட்சியின் நட்பென்பது இணக்கமாக இருக்கிறது, வலுவாக இருக்கிறது.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைவரான கூட்டணி மிகவும் வலிமையோடு தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.
மத்தியில் சனா தானா கட்சிகள் வலுப்பெறக் கூடாது என்பதற்காக பல முயற்சிகளை தமிழகத்தில் மேற்கொண்டு வருகிறோம்.உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு நடத்த தயாராக இல்லை.
18 சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடக்க வேண்டும் ஆனால் ஆளுங்கட்சி தரப்பில் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் தேர்தல் நடத்துவதற்கு உரிய அடையாளம் தென்படவில்லை.இது தள்ளிப் போகும் வாய்ப்பு இருக்கிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே மீண்டும் அணை கட்டுவதற்கு முயற்சி ஏற்படுத்துவது கண்டனத்துக்குரியது.இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்தது கண்டிக்கதக்கது.இதனை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.இது மீண்டும் கர்நாடகா தமிழ்நாட்டிற்கு இடையான உறவிற்கு பதட்டத்தை ஏற்படுத்தி சூழல் உருவாகும்.எனவே மத்திய அரசின் இந்த முயற்சியை முறியடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு நற்செய்தியை அறிவிக்கும் பொழுதுதான் கூட்டணி சம்பந்தமான முடிவுகள் பேச்சுவார்த்தைகள் முடிவெடுக்க முடியும் எனவே இதுகுறித்து இப்பொழுது பேசுவது சாத்தியமில்லை என்று கூறினார்.
