தமிழ்

சலனமடைந்திருக்கும் இந்தக் காலத்தில் தொழில் முனைய நினைப்பவரா ? அல்லது தொழில்முனைவோரா நீங்கள் ? – சலனமடைந்திருக்கும் இந்தக் காலத்தில்

கோவிட் எனப்படும் பெரும்பரவல் தொற்று நோய் ஒரு ஆரோக்கியப் பிரச்சனை என்பதிலிருந்து விரிந்து பொருளாதாரப் பிரச்சனையாக மாறி வருகிறது. அது சிறு மற்றும் குறுந்தொழில்களை மிகவும் பாதித்துள்ளது.   அவற்றின் வரவும் வருமானமும் சுமார் 75 % வீழ்ச்சி கண்டுள்ளது.  அதனால் தொழில்முனைவோர் யாவரும் தங்களுக்கு நிதி ஆதாரத்தை அளிப்பவர்களை நாடுவது இயல்பானதொரு விளைவு.  நிதி அளிப்பவர்களே இதைப் போன்ற சிறு குறு வியாபாரங்களின் வழிகாட்டிகள்.  அவர்கள்தான் ஒரு நிறுவனத்தின் மொத்த இயக்கத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறார்கள்.

கீழ்கண்ட விஷயங்களில் கிடைக்கப் பெறும் தெளிவும் புரிதலும் கோவிட் புயல் உருவாக்கியுள்ள புயலை எதிர்கொள்ளும் வலுவை நமக்கு அளிக்கின்றன. 

நம் கட்டுக்குள் இருக்கும் விஷயங்களின் மீது கூர்ந்த கவனம் செலுத்துவது.

தற்போதைய சூழலில் தெளிவு இல்லை.  இந்த தொற்றின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை இன்னமும் நம்மால் கணிக்க இயலவில்லை.  அதனால் நம் திட்டமானது பல நிலமைகளுக்கு ஏற்றவாறு திட்டமிடப்பட வேண்டும்.  பின்னர், தேவைக்கேற்ப மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். அவை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அமல்படுத்துவது போல் இருக்கலாம். உருவாகும் சூழலை கருத்தில் கொண்டு நம் வியாபாரத்தின் மையக் கூறின் தன்மைகேற்ப தேவையான மாற்றங்களைப் புகுத்தலாம்.

நம் செலவினங்களின் கட்டமைபைப் புரிந்து கொள்வது.   

நம் நிதி கையிருப்பைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  “சிக்கலான தருணங்களில் நிதிக் கையிருப்புதான் செங்கோல் ஏந்துபவன்.  வழக்கமான காலத்தை விட கூடுதல் கவனத்தோடு நம் செலவினங்களை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.  கோவிட் தொற்று காலத்தில் தேவையான நிதியை வங்கியில் வைத்திருப்பவருக்கு எதிர் காலத்தில் வளர்ச்சி வாய்ப்புகளை கைவசப்படுத்தும் நிலை பலமாக இருக்கும். 

தற்போதைய சூழலில் வியாபாரத்தைப் பிழைக்க வைக்கும் திட்டம் :

தொழில்முனைவோர் தற்போதைய இக்கட்டான சூழலைத் தாக்குப் பிடிக்கும் திட்டத்தை வரைய வேண்டும்.  அப்படிச் செய்தால்  வரப்போகும் புதிய சூழலில் எப்படி திளைத்து வளர்வது (எந்தெந்த சந்தைப்படுத்தும் ஊடகங்களைப் பயன்படுத்துவது) போன்ற விஷயங்களைத் தீர்மானிக்க முடியும்.   முக்கியமான பணிகளில் பொறுப்புகளில் யாரை நியமிக்கலாம், யாரால் நிறுவனத்திற்குப் பலன் கிடைக்கும், தற்போதைய வேலை வாய்ப்புச் சந்தையில் எந்தெந்த திறன் படைத்தவர்கள் இருக்கிறார்கள்,  யாரைப் பணியில் அமர்த்தினால் அவர்களுக்கும் நமக்கும் பலன் கிடைக்கும் போன்ற விஷயங்களைத் தீர்மானிக்க வேண்டும்.  

புதிய தரவுகளைக் கொண்டு புதிய விதிகளை அமல்படுத்த வேண்டும். 

பழையன கழிய வேண்டும்.  புதியன புக வேண்டும். இது வரையில் நாம் அறிந்து வைத்திருந்தவை அனைத்தையும் ஒதுக்க வேண்டும்.  புதிய தரவுகள் மற்றும் புதிய சிந்தனையே  நம் நிறுவனத்திற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.  அவை வெளிப்படையான உண்மைகளாக இருத்தல் அவசியம்.  நாம் எதிர்கொண்டுள்ள சவால்களையும் ஆபத்துகளையும் சந்திக்கும் நம் குழு அங்கத்தினர்களின் சிறப்புத் திறன்களை முறையாக ஆட்படுத்த வேண்டும். 

பணத்தைப் பாதுகாத்து வைப்பது. 

தொழில்முனைவோர் இயல்பாகவே எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.  கோவிட் பிரச்சனை தீர்ந்ததும் வியாபாரம் விரைவில் சீராகி விடும் என்று நினைக்கக் கூடும்.  அதன் காரணமாக நிதி நிலமையை ஆராய்ந்து கையிருப்பை வலுப்படுத்தாமல் போகும் வாய்ப்பு உண்டு.  தற்போது பணத்தைத் தேக்கி வைக்கும் வழியை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்தால் பின்னர் தேவைக்கேற்ப சீர் செய்து கொள்ளலாம்.  இல்லையென்றால் இந்த வீழ்ச்சியிலிருந்து மேலே வரும் போது  கையில் பணம் இல்லாமல் போய்விடும்.  அது மட்டுமல்ல அது நிரந்தரமாகவும் ஆகி விடும்.  

எது மாறாதோ அதன் மீது கவனக்குவிப்பு செலுத்த வேண்டும். 

எவையெல்லாம் மாறாதோ அவற்றைக் கவனமாக ஆராய வேண்டும்.  நாம் விற்கும் பொருள் உண்மையாகவே பயனுள்ள ஒன்றாக இருக்க வேண்டும்.  “தரமும் மற்றவர் மீது கரிசனமும் மிக முக்கியமானவை”. வியாபாரம் என்பது வியாபாரத்திற்கும் வியாபாரத்திற்கும் உண்டான பிணைப்பல்ல.  வியாபாரத்திற்கும் வாடிக்கையாளருக்கும் உண்டான பிணைப்பும் அல்ல.  ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் இடையே உண்டான இணைப்பு. 

திடமானவராகவும் தீர்மானம் கொண்டவராகவும் இருங்கள். 

ஊழியர்கள்,  நிர்வாக இயக்குநர்கள், முதலீட்டாளர்கள் யாரிடமும் இதம் தரும் பொய்யுரைகள் வேண்டாம்.  எல்லோருமே பிரச்சனைக்குள் இருக்கிறோம்.  தற்போதைய சூழலில் திடமான போக்கும், நேர்மை மற்றும் நம்பிக்கையின் கூட்டுமே அவசியம்.  தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய சரியான தருணம் இதுவே. கவனக்குறைவாக இருப்பது ஆபத்தானது.  எடுக்க வேண்டிய முடிவுகள் கசப்பானதாகவும் கடுமையானதாகவுமே இருக்கும்.  தற்போது தயங்கினால், பணத்தைச் செலவழித்து விட்டால் பின்னாளில் சீர் செய்ய முடியாத அளவிற்கு நாம் வீழ்ந்து விடுவோம். 

புதிய வாய்ப்புகளைத் தேடுதல்.  

தம் குழுக்களின் தேக ஆரோக்கியம், பாதுகாப்பு, தம் நிறுவனத்தை உயிர்ப்போடு வைத்திருப்பது போன்றவை ஒரு தொழில்முனைவரின் தற்போதைய முக்கியப் பணி.  லாபம் வரத்தொடங்கியதும் நம் வியாபாரத்தில் இருக்கும் புதிய வாய்ப்புகளையும் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதையும்  சேமிப்பதையும் பற்றிச் சிந்திக்க வேண்டும்.  புதிய வாய்ப்புகளைத் தேட வேண்டும்.  நெருக்கடிகள் நீங்கய பின்பு புதிய வாய்ப்புகள் உருவாகும் என்பது ஒரு சரித்திர உண்மை.  அதைச் சரியாகப் பயன்படுத்துபவர்கள்வெற்றி  பெறுகிறார்கள். 

முதலீட்டை உருகாக்க முடியும் என்று நம்புங்கள்.

பொருளாதார நெருக்கடியை முதலீட்டாளர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை நம்மால் கணிக்க முடியாது.  உறுதியான வியாபாரங்கள் கூடுதல் முதலீட்டைப் பெற முடியும்.  அதை ஒரு பெரும் வாய்ப்பாகப் பார்ப்பார்கள். தற்போதைய சூழலில் உயர்ந்த மதிப்பீடுகளைப் பெறுவது சிரமமாக இருக்கலாம்.  பணத்தைத் தருவதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள் கடுமையாக இருக்கலாம்.  வரவுள்ள தொகை கூட குறைவாக இருக்கலாம்.  ஆனாலும் நிதி கிடைக்கலாம்.  நம்பிக்கையோடும் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டும் இருந்தல் நலம். 

இது ஒரு சவாலான நேரம்.  தொழில்முனைவர் மனவலிமையோடு இருக்க வேண்டும் என்று சொல்வது இதைத்தான்.  ராட்சச உருள் வண்டியில் பயணிக்கிறோம் நாம்.  ஆனாலும் நினைவில் கொள்ளுங்கள்.  வளரவும் மிளிரவும் இதுவே சமயம் !

About the Author

Manickavel Muthusamy is the CEO & Co-Founder of Expert Solution Technologies Canada Inc.  An Entrepreneur with in-depth understanding of Sales &Marketing of IT Services, Outsourcing and Global Delivery, worked with leading MNCs in multiple geographies including India, Canada and USA in his career spanning over 22 years. Currently owning a software firm in Canada helping Small & Medium Size business with a wide range of accounting technology solutions & services.

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us