சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவீனமயமாக்கப்பட்ட உண்டியல் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
சரிமலை ஐயப்பன் கோயிலி்ல் நேற்று நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. ஐயப்பனுக்கு நிர்மால்ய பூஜை, நெய் அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றது.
தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதரி ஆகியோர் வழிபாடுகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து உச்சிபூஜை நடைபெற்றது. மலையாள நடிகர் திலீப் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சன்னிதானம் முன்பு இருந்த காணிக்கை உண்டியல் வடக்கு நோக்கி மாற்றி அமைக்கப்பட்டு நவீன மயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி உண்டியல் நிறைந்ததும் காணிக்கை கூடத்தில் உள்ள இயந்திரம் இயக்கப்படும். ரூபாய் உள்ளிட்டவை கன்வேயர் பெல்ட் மூலம் தேவசம் அலுவலகத்திற்கு நேரடியாக வரும். இவை கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு ஊழியர்கள் மூலம் எண்ணப்படும்.
இந்த நவீன காணிக்கை உண்டியலை தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தொடங்கிவைத்தார்.சுவாமியேசரணம்
