குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி நாளை நவம்பர் 22ம் தேதியன்று அடிக்கால் நாட்டவுள்ளார்.
மொத்தம் 65 இடங்களில் 129 மாவட்டங்களில் இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர்.நகரங்களில் மாசு அளவைக் குறைப்பதற்காக குழாயில் செலுத் தப்படும் இயற்கை எரிவாயு இணைப்புகளை அதிகரிக்க வேண் டும் என பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு கூறினார். இதன்படி, தமிழகத்தில் குழாய்கள் மூலம் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு எரிவாயு விநியோகிக்கும் நகர எரிவாயு விநியோக திட்டத் துக்கு வரும் 22-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழகம் முழுவதும் இத்திட்டத்துக்கு ரூ.2,100 கோடி முதலீடு செய்யப்படும். 15,200 பேருக்கு இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
