கடலூர் மாவட்டத்தில் அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழையும், 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தகவல் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இந்த எச்சரிக்கையால் மாவட்டம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.2 நாட்களுக்கு தேவையான உணவு, குடிநீர், அத்தியாசவசிய பொருட்களை பொதுமக்கள் சேகரித்து வைத்துக்கொண்டால் மழையை எதிர்கொள்ளலாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.