சுகாதார மேம்பாட்டில் இந்திய அளவில் தமிழகம் 9ஆவது இடத்தில் உள்ளதாக மத்திய நிதி ஆயோக் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக உதவியுடன் ஆய்வறிக்கைகளை வெளியிடும் நிதி ஆயோக், மாநிலங்களில் சுகாதாரம் குறித்து ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு, நோய்களை வருமுன் காக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள், அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு முடிவை வெளியிடுகிறது.
அந்த வகையில், 2015- 2016ஆம் ஆண்டை அடிப்படையாக வைத்தும் 2017-2018 ஆம் ஆண்டை மேற்கோள் காட்டியும் நாட்டின் சுகாதார அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவ்வகையில் சுகாதாரத்தில் சிறந்த மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதலிடம் பெற்றுள்ளது.
ஆந்திரா மற்றும் மகாராஷ்ட்ரா அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ள நிலையில், தமிழகம் 9ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் இப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
