TAMIL

இந்தியாவை அழிக்கும் மனிதன் – நமது பாரத தேசம்

தமிழாக்கம் – #சங்கீராஜகுமாரி 
நம் இந்தியாவை- பாரத தேசத்தை பாழ் செய்ய வந்த பாதகன்
ராகுல் காந்தி, ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப்பேரன் மற்றும் இந்திரா காந்தியின் (இந்த காந்தி என்ற பட்டப் பெயர் வந்த கதை ஒரு தனிக்கதை) பேரன் என்று பாத்தியதை கொண்டாடும், அன்டோனியோ மைனோ என்ற இயற்பெயர் கொண்ட சோனியாவுக்கும், ராஜிவ் காந்திக்கும் நடந்த திருமணத்தின் மூலம் பிறந்ததாகக் கருதப்படும் இவர், தன்னைத்தானே சித்தரித்துக்கொள்ளுவது போலவோ / அல்லது ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் வருணிப்பது போலவோ ‘கோமாளியோ / அப்பாவியோ அன்றி முட்டாளோ’ அல்லவே அல்ல, அது திட்டமிட்டுக் கட்டமைக்கப் பட்ட ஒரு பிம்பம் மட்டுமே.
ஏறத்தாழ ஐம்பது வயதைத் தாண்டிய இந்த மனிதன் (!!!) ஒரு நச்சுத்தன்மையும் நீசத்தனமும் நிறைந்த ஒரு இழிபிறவி.
தரும நியாயங்களுக்கு எதிரான, பிறரை வேதனைப்படுத்துகின்ற, அருவருக்கத் தக்க செயலைச் செய்பவன் எவனோ அவனே இழி பிறவி. கேவலமான, ஈனமான, அசிங்கமான ஒழுக்கமற்ற நடத்தையுள்ள யாரையாவது பார்த்து நீங்கள் திகைத்ததுண்டா? அத்தகையவர்களையே இழிபிறவி என்று குறிப்பிடப் படுகிறது.
பாம்புவகைகளிலேயே மிகவும் விஷத் தன்மை உடையது என்று கருதப்படும் கட்டுவிரியனும், கருநாகமும் கல்மீன் என்ற Synanceia verrucosa என்ற இனத்தைச் சேர்ந்த, உலகிலேயே மிகக் கொடிய நஞ்சினைக் கொண்ட மீனும் ஒருங்கிணைந்தால் எத்தனை நச்சுத்தன்மை இருக்குமோ அத்தகைய நஞ்சுடையவர் இவர். தோலிலும் இறகுகளிலும் விஷத்தை வைத்திருக்கும் அழகிய ஹூடட் பிடோஹுய் (Hooded pitohui) பறவை கூட அப்பாவியாய்ப் புன்னகை புரியும் முகமும் அடிநெஞ்சில் வஞ்சமுமும் உள்ள இவரிடம் தோற்றுவிடும்

இவரின் உண்மைத் தன்மையினைக் காட்டக் கூறிய ஒப்புமைகள் போதும். இப்போது விஷயத்துக்கு வரலாம்.

இவர் ஏன் இப்பொழுது நம் இனிய பாரத தேசத்தினை நாசமாக்கக் கங்கணம் கட்டியுள்ளார் தெரியுமா? மிக எளிமையான விடைதான்.
இவர் கொள்ளுத்தாத்தா, பாட்டி மற்றும் தந்தை ( பொறுப்புத் துறப்பு : அனைத்து உறவுகளும் ஊகத்தின் அடிப்படையிலானவை மட்டுமே) நேர்முகமாகவும், தாய் பின்னணியில் இருந்தும் தலைமுறை தலமுறையாக அதிகார பீடத்தில் அமர்ந்துகொண்டு இந்த நாட்டின் வளங்களைச் சுரண்டி, நம் பண்பாட்டினைப் பாழடித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு வசதியாக, அந்தக் குடும்பம் நம் நாட்டின் ஸ்திரத் தன்மையை சீர்குலைத்து அந்தச் சீர்கேட்டைப் பயன்படுத்தி பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தது. விதி வசமாக (அல்லது நமது நல்வினைப் பயனாக), அவர்கள் உருவாக்கிய புதைகுழியிலேயே ‘தாங்களே எப்போதும் அதிகாரத்தில் கோலோச்சுவோம்’ என்ற அவர்களது கனவானது புதைந்துவிட்டது.
அவர்களது அதிகாரம் என்பது சூழ்ச்சி மற்றும் அடக்கியாளும் திறனை அடித்தளமாகக் கொண்டது (இது சிசிலியன் கொள்ளைக்கும்பலிடம் இருந்து கற்றுக் கொண்ட தந்திரம். கட்டுப்படுத்துதல், அல்லது கட்டுப்படுத்தக்கூடியவர்களை அடக்கி ஆளுதல் – இதைப் படிக்கையில் மறைந்த அஹமது படேலோ, நீதிமன்றங்களிலேயே உறுதிச் சான்றுகளை மாற்றிக் கொடுத்த, திகார்புகழ் சூத்திரதாரியோ, பிரதமர் என்ற பதவிக்கே களங்கம் விளைவித்த ஒருவரோ நினைவு வந்தால் – அதற்கு நீங்களே முழுப் பொறுப்பாளி.
அவர்களது குடும்பமோ அல்லது காங்கிராசோ இனி மீண்டும் ஆட்சிக்கு வருவது குதிரைக் கொம்பு என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ளும் முன்பே ராகுல் காந்தி (ராகா) புரிந்துகொண்டுவிட்டார். (ஜின்னா எப்படி பிளவுபட்ட இந்தியா அல்லது பாழடைந்த இந்தியா என்று திட்டமிட்டாரோ அதேபோல) ராகாவுக்கும் இப்பொழுது ஒரே மாற்றுத் திட்டம்தான். தாங்கள் ஆள முடியாத இந்த தேசத்தை நாசமாக்க வேண்டும். இதைத் துண்டு துண்டாக்கவேண்டும், அதற்கு நாட்டில் குழப்பம் விளைவிக்கவேண்டும், மக்களைப் பதற்றத்தில் ஆழ்த்தவேண்டும்… எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல் தொடரவேண்டும். – இதற்காகப் போடப்பட்டதே ராகாவுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான ஒப்பந்தம். இதன் ஷரத்துகள் என்னவென்பது குடும்பத்தவர் தவிர யாரும் அறியாத பரம ரகசியம் என்றாலும் அதன் அடிப்படை நோக்கம் இந்தியாவின் சீர்குலைவே. ஒரு கருத்தாக்கத்தை, புனைவை உருவாக்கவும், பாகிஸ்தானுடனும், இந்தியாவுக்குள்ளேயே இருக்கும் அதிகாரப் பசியுள்ள சில சக்திகளுடன் கூட்டணியமைக்கவும் (பதவியைப் பிடிக்க 350 கோடிகள் செலவழித்த ஒரு மாநிலத் தலைவரும், மேலே எளிய காதி உடையும் உள்ளே தற்பெருமையும் அதிகாரப் பசியும் கொண்ட ஒரு அரசியல்வியாதியும், இன்ன பிற, காலிஸ்தானிகள் போன்ற பிரிவினை வாத சக்திகளும், இலவச விமானப்

பயணங்கள், பரிசுகள், விருதுகள் போன்ற எலும்புத் துண்டுகளுக்காக இவர்களுக்கு அடிவருடிகளாகிப் போன ஊடகங்களும், இன்னபிற பிரிவினைவாத சக்திகளும் இவற்றில் சில) பயன்பட்ட செம்மறியாடுகளில் ஒன்றுதான் சித்து .
நேற்றைய பாராளுமன்ற உரையில் திமுகவின் பிரிவினைவாதக் குரலின் ஒரு அடையாளமான ‘ஒன்றியம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி, மறைமுகமாக அதை ஆதரித்தது இங்கு குறிப்பிடத் தக்கது (சொல்லப் போனால் தன் முகமூடியினை லேசாக ராகா நழுவவிட்ட முதல் தருணம் இதுதான்). இனி இந்தப் புனைவுகளின் அடிப்படையில், நமது தற்போதைய அரசாங்கமும் அதன் செயல்பாடுகளும் கூறுகூறாக ‘பன்னாட்டு ஊடகங்களால்’ கிழிக்கப் படும். நமது நாடு வல்லரசாவதை, ஒரு ஆற்றல் மையமாக உருவெடுப்பதை விரும்பாத, தங்கள் மேலாதிக்கம் பறிபோவதை விரும்பாத பல சக்திகள் (பெரியண்ணன் நாட்டு அதிபர், துணை அதிபர், போலிக் கம்யூனிசம் பேசி பெரும் தொழிலதிபர் ஜா ஸோ) இந்தியாவுக்கு எதிரான இந்த ‘விளையாட்டிற்கு’ ஆதரவானவை.
உண்மை, யதார்த்தம், சத்தியம் என்ற எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் சரி. நாம் புரிந்துகொள்ளவேண்டியது இதைத்தான்: ராகா உண்மையில் அறியாப்பிள்ளையும் இல்லை, அப்பாவியும் இல்லை. முதலிலேயே கூறியதுபோல நெஞ்சத்தில் நஞ்சும் வஞ்சனையும் நிறைந்த கபட வேடதாரி. கோமாளி வேடமிட்டு நம் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, இன்னும் பல தலைமுறைளுக்கு தங்கள் குடும்பம் ஆட்சியதிகாரத்தில் இருக்கத் தேவையான சூழ்ச்சிகளைச் செய்யும் காரியவாதி.

இந்தக் கட்டுரை ஒரு தொடராக வரவுள்ளது, இதற்காக நான் பல ஆதாரங்களைத் திரட்டிவருகிறேன்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றுமுள்ள தேசவிரோத, பிரிவினை வாத சக்திகள் அனைத்திற்கும் தேசியவாதிகளே முதல் எதிரிகள். அவர்களது கருத்துருவாக்கங்கள் தேசியவாதிகளைக் குறி வைத்தே தாக்குபவை.
ஆனால் நமது நற்பயன் இந்தப் புதிய ஆட்சி. இத்தகைய ஆளுமைகள் நமது பாரதத்தில் உருவாகும் என்றோ அதை நாம் நம் வாழ்நாளில் காண்போம் என்று நம்மில் பலர் கனவு கூடக் கண்டதில்லை. புத்தாக்கம் பெறும் இந்த பாரதத்தைக் காணும் பாக்கியம் நம் தலைமுறைக்குக் கொடுத்து வைத்திருக்கிறது.

வாழ்க பாரதம்.
(தொடரும்)

1 Comment

1 Comment

  1. Pingback: buy dmt online smoke,

Leave a Reply

Your email address will not be published.

seventeen + 9 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us