டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் முதலமைச்சரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து செயல்பட்டு வந்ததாகவும், கட்சிக்காக கருத்து வேறுபாடுகளை தூக்கி எறிந்துவிட்டதாகவும் கூறினார்.
மேலும் அதிமுக அரசை கலைக்க வேண்டும் என்ற டி.டி.வி.தினகரனின் கருத்தை யாரும் ஏற்கவில்லை என்றும் அதனுடைய வெளிபாடாகவே தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதனை உணர்ந்து டி.டி.வி.தினகரன் ஒதுங்கி கொள்ள வேண்டும் என்றும் கலைச் செல்வன் தெரிவித்தார்.
