கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், மலைப் பாம்பை விழுங்க முயற்சித்த அரிய வகை ராஜநாகத்தை வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கல்லாறு பகுதியில் அமைந்துள்ள மோகன்குமார் என்பவருக்கு சொந்தமான பாக்கு தோப்பு பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அப்போது, தோட்டத்தில் சுற்றித் திரிந்த மலைப் பாம்பை, அரிய வகை ராஜநாகம் ஒன்று விழுங்க முயற்சித்துக்கொண்டிருப்பதை அவர்கள் கண்டுள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள், மலைப்பாம்பை விழுங்க முயற்சி செய்த 10 அடி நீள ராஜ நாகத்தை நீண்ட நேரமாக போராடி, லாவகமாக பிடித்தனர்.
ராஜ நாகம் மற்றும் மலைப் பாம்பு ஆகியவை மீட்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதியில் அவை விடப்பட்டன.
