பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் 6 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. மூத்த அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். 6 முக்கிய மசோதாக்களுக்கு இன்றைய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் சைபர் குற்றங்களை விசாரிக்க அதிகாரங்கள் வழங்கும் சட்டத்திருத்த மசோதா, சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் சட்டத்தில் திருத்தம், மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் ,நுகர்வோர் பாதுகாப்பு மசோதா,மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் போன்றவை முக்கியமான மசோதாக்களாகும்.
இவற்றில் சில மசோதாக்கள் மக்களவையில் கடந்த நாடாளுமன்ற காலத்தில் நிறைவேறியுள்ள போதும் மாநிலங்களவையில் போதிய ஆதரவு கிடைக்காமல் திருத்தம் செய்ய நாடாளுமன்ற குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் சில மசோதாக்களை மீண்டும் மாநிலங்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
