தமிழகத்தில் கடுமையான வெயில் வாட்டி வரும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.
ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அருணகிரிசத்திரம், சேவூர், அவுசிங்போர்டு,மற்றும் பையூர் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம், கும்பகரை, வடுகபட்டி, முருகமலை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெரம்பலூரில் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் துறைமங்கலம், நான்கு ரோடு ஆகிய இடங்களில் அரை மணி நேரம் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் திடீரென பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி காணப்பட்டதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
