தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக அறிவித்த வானிலை மையம், கேரளாவின் சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்தது. கொச்சி, ஆலப்புழை, திருவனந்தபுரம், எர்ணாகுளம் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில் நாகர்கோவில், குளச்சல், திங்கள்சந்தை, அகஸ்தீஸ்வரம், குருந்தன்கோடு உள்ளிட்ட பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் மாணவ-மாணவிகள், வேலைக்கு சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.
குமரி மாவட்டத்தில் மலையோர கிராமங்களில் தொடர் கனமழை மற்றும் இருண்ட வானிலை நிலவுவதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக தெரித்தார்.
