ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தில் தீவிரவாதி ஒருவனை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
பட்காம் மாவட்டத்தில் சதூரா (Chadoora) என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மறைவிடத்தில் இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதால், அவர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
