சின்னதம்பி யானையை கும்கி யானையாக மாற்ற தடை விதிக்க கோரி வழக்கு
யானை – மனிதர்களுக்கு இடையில் மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன விலங்குகளை பாதுகாக்கும் வகையில் ஊருக்குள் நுழையும் யானைகளை பிடித்து, வனப்பகுதிக்குள் விடுவதற்கு மாற்று வழிகளை பின்பற்ற உத்தரவிட வேண்டும்.
யானைகள் ஊருக்குள் நுழைவதை கண்காணிக்க தனி குழு அமைக்க வேண்டும்.
ஊருக்குள் நுழையும் யானைகளை பாதுகாப்பாக வனப்பகுதிகளில் விடுவதற்கு தகுந்த விதிமுறைகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
என்று வழக்கு
சின்னதம்பி யானையைப் பிடித்து கும்கியாக மாற்றும் திட்டம் ஏதும் தற்போதைக்கு இல்லை – அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கம்
தற்போது அமராவதியில் நடமாடும் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்ப இரு கும்கி யானைகளும், யானைகள் நிபுணர் அஜய் தேசாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர் – அரசுத்தலைமை வழக்கறிஞர்
ஏற்கனவே மதுக்கரை மகாராஜா என்ற யானையை பிடித்து கும்கியாக மாற்றும் போது அது இறந்து விட்டது – மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டு
தலைமை வனப் பாதுகாவலர்: எல்லா யானைகளையும் கும்கி யானைகளாக மாற்ற முடியாது. முதலில் முதுமலை வனப்பகுதிக்கு அனுப்ப திட்டமிட்டோம். சிறைபிடிப்பது கடைசி வாய்ப்பாக பயன்படுத்துவோம். இதுவரை யானையை பிடித்து கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை. வனப்பகுதிக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துவருகிறோம். இரு யானைகள் குட்டியுடன் வந்தன. அவற்றை திருப்பி அனுப்பிய போது, சின்னத்தம்பி யானை மட்டும் திரும்பி ஊருக்கு வந்து விட்டது. மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றன. கும்கி யாக மாற்ற பல பயிற்சிகள் வழங்கப்படும்.
