மத்திய பட்ஜெட் தொடர்பாக இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அந்த கூட்டமைப்பின் தென்னிந்திய தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தன வேலு, அந்நிய நேரடி முதலீடு முறை எளிதாக்கப்பட்டுள்ளது, 400 கோடி ரூபாய்க்கு வரை வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது போன்றவை வரவேற்கத்தக்கது என்றார்.
சம நிலையுடன் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் பெட்ரோல், டீசல் மீதான செஸ் ((cess)) வரி உயர்த்தியது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தங்க நகைகள் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் கூறினார். விவாசயம் உள்ளிட்ட அனைத்து துறைக்கும் பொதுவான நல்ல பட்ஜெட்டாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
