ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள புலிகள், செந்நாய்கள் மாயாற்றின் கரைக்கு வந்து தண்ணீர் குடித்து செல்வதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மாயாறு மற்றும் பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதி உள்ளதால், வனவிலங்குகள் இப்பகுதிக்கு வந்து நீர் அருந்தி செல்கின்றன. குறிப்பாக புலி மற்றும் செந்நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடா செல்லும் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
