திருமயம் பகுதியில் ஒரு கோயில் அருகே கடந்த 30 ஆண்டுகளாக பெட்டிக்கடை வைத்து நடத்தி வருபவர் வாசுகி. இதில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கடையில் , தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் வாசகியின் கடைக்கு எதிரிலேயே திருமயம் திமுக ஒன்றிய செயலாளர் சரவணனின் அண்ணனான சிவராமன் என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார்.ஆனால் நிறைய மக்கள் சிவராமன் கடைக்குச் செல்லாமல் வானதியின் கடையிலேயே பொருட்கள் வாங்கினர்.
இதனையடுத்து திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் சில நாட்களாக வாசுகியின் கடையைக் காலி செய்யச் சொல்லி மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் ஒருகட்டத்தில், வாசுகியின் கடையில் இருந்த பொருட்களை எடுத்து தெருவில் வீசி, அவரையும் அவரது தங்கை கௌரி, அவர்களுடன் கடையில் இருந்த பெண்களையும் பலமாக தாக்கினர்.
தற்போது தாக்கிதலில் காயமடைந்த பெண்கள் அனைவரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்மைக்காலமாக கிராமசபா கூட்டங்களை நடத்தி வரும் ஸ்டாலின் இதைப் பற்றி கேட்பாரா…? தன் கட்சி நிர்வாகியை என்ன செய்வார் ..?என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
