தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால், அதில், மக்கள் நீதி மய்யம் போட்டியிட தயார் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். பாஜகவின் B டீம் என தம்மை பற்றி கூறுதவற்கு பதிலடியாக, கெட்டவார்த்தையை பயன்படுத்தப்போவதில்லை என்றும், செயலின் மூலமே, பதிலடி கொடுக்கப்படும் என்றார்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால், அவருடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசப்படும் என கமல்ஹாசன் கூறினார். காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட, மக்கள் நீதி மய்யம் தயார் என்றும் அவர் தெரிவித்தார்.
