மக்களவையில் சந்திராயன்2 குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங், முதற்கட்டமாக நிலவின் மேற்பரப்பிலிருந்து 30 கிலோ மீட்டர் உயரம் வரை விநாடிக்கு ஆயிரத்து 683 மீட்டர் என்ற வேகத்தில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த வேகமானது 7.4 கிலோ மீட்டர் உயரத்திற்கு சென்றதும், விநாடிக்கு 146 மீட்டர் என்ற அளவுக்கு குறைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திட்டமிடப்பட்டதைவிட வேகம் குறைந்ததே, கடின தரையிறக்கத்துக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
