மானாமதுரை பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், அங்குள்ள கிணறுகள் வறண்டு விட்டன. நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், வைகை ஆற்றின் குறுக்கே மானாமதுரை அருகேயுள்ள திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல் ஆகிய இடங்களில் நீர் உறிஞ்சு தடுப்பணை கட்டும் பணி நடக்கிறது.
இதன்மூலம், ஆற்றில் சுமார் 30 அடி ஆழம் பள்ளம் தோண்டி மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் தேக்கப்படும். தண்ணீர் தேங்கி நிற்பதன் மூலம், நிலத்தடி நீர்மட்டம் உயரும். இப்பணியை தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் பார்வையிட்டார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக ஆற்றுக்குள் தடுப்பணை கட்டும் புதுமையான திட்டம் என்றும், சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் கூறினார்.
