காஷ்மீர் பிரச்சினையில் உதவி தேவை என இந்தியாவும் பாகிஸ்தானும் கோரினால் உதவத் தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தாம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் பேசியதாகவும் இந்தியாவிடமும் மனம் திறந்து பேசியதாகவும் தெரிவித்த டிரம்ப், இருநாடுகளுக்கும் இடையிலான சண்டை நீண்டகாலமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களான மோடியும் இம்ரான் கானும் அருமையான தலைவர்கள் என்றும் இருவரும் விரைவில் சுமுகமான முடிவுக்கு வருவார்கள் என தாம் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
