இந்தியாவுடன் பாதுகாப்புத் துறை தொடர்பான வர்த்தகம் இந்த ஆண்டு 18 பில்லியன் டாலர் என அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.
இந்தியாவுடன் நட்புறவை வலுப்படுத்த அமெரிக்கா உறுதியுடன் இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வாரம் டெல்லியில் இந்தியா-அமெரிக்கா இடையே 9வது பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
ராணுவத்திற்குத் தேவையான ஆயுதத் தளவாடங்கள், அறிவியல்,தொழில்நுட்ப ஒத்துழைப்பு போன்றவை குறித்து இந்த மாநாட்டில் இருநாடுகளும் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.
