புதுடெல்லி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13பேர் பலியானது குறித்து சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சிபிஐக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நீதிமன்றம் ரத்து செய்தது. தூத்துக்குடியில் 2018ம் ஆண்டு மே மாதம் காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
