திருவாரூர் திருப்பரங்குன்ற தேர்தலை உடனடியாக நடத்த கோரி ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் , மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது – இடைத் தேர்தல் நடத்துவது குறித்து வழக்கு தலைமை தேர்தல் ஆணையத்தில் உள்ளதால், மனுவில் கூறப்பட்டுள்ள திருவாரூர் திருப்பரங்குன்றத்திற்கு தேர்தலை நடத்த விரைவாக நடத்த தற்போது உத்தரவிட முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.
காஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடத்த முடியாத ஒரு சூழல் இருப்பதால் பல்வேறு தரப்பினரும் தரப்பினரும் தேர்தலை தள்ளி வைக்க கோரி கோரிக்கை வைத்தனர்,அதனை ஏற்று தேர்தலானது தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார், அதில் திருவாரூர் திருப்பரங்குன்ற தேர்தலை விரைவாக நடத்த உத்தரவிடக்கோரி கோரிக்கை வைத்தார்
வழக்கின் விசாரணை இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் வந்திருந்தபோது நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்
