திருப்பதி குடைகள் நாளை சென்னையில் இருந்து திருப்பதி திருமலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
நாளை காலை சென்னை சென்னகேசவ பெருமாள் கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டு பிற்பகல் 4 மணியளவில் யானை கவுனி தாண்டி சூளை, பட்டாளம், வழியாக குடைகள் கொண்டு செல்லப்படுகின்றன. இதனை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வதால் போக்குவரத்து மாற்றிவிடப்பட உள்ளது.
நேற்று இந்த திருப்பதி குடைகள் திருமலையில் இருந்து திருக்காளஹஸ்தி வரை கொண்டு வரப்பட்டன. காளஹஸ்தி தொகுதி எம்.எல்,ஏ மதுசூதன ரெட்டி உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் திருமலை திருப்பதி குடைகளை தரிசித்து பூஜைகள் செய்தனர்.
