திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 109 கோடியே 60 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
திருமலையில் உள்ள பெருமாள் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதன் படி கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சுமார் 23 லட்சத்து 82 ஆயிரத்து 843 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர்.
பக்தர்கள் அளிக்கும் காணிக்கையை எண்ணும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவு பெற்றுள்ளது. கடந்த மாதம் மட்டும் 109 கோடியே 60 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
