இந்தியா மீது பாகிஸ்தான் ஒரு அணுகுண்டை வீசினால், பதிலுக்கு இந்தியா 20 அணுகுண்டை வீசி ஒட்டுமொத்தமாக அழித்து விடும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த நாளிதழ் ஒன்றுக்கு அவர் ஐக்கிய அரசு அமீரகத்தில் அளித்துள்ள பேட்டியில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவு மீண்டும் அபாயகரமான நிலையை எட்டியிருப்பதாக குறிப்பிட்டார்.
இந்தியா மீது ஒரு அணுகுண்டை நாம் வீசி தாக்கினால், பதிலுக்கு 20 அணுகுண்டை நம் மீது வீசி இந்தியா நிர்மூலமாக்கி விடும் என்று அவர் கூறினார். எனவே இதற்கு ஒரே தீர்வாக முதலிலேயே 50 அணுகுண்டுகளுடன் இந்தியாவை தாக்க வேண்டும், அப்போது தான் இந்தியாவால் தாக்க முடியாது என்று தெரிவித்தார்.
முதலில் தாக்குதல் தொடுக்க தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பாகிஸ்தானில் அரசியல் சூழல் சாதகமாகும் போது நாடு திரும்ப தயார் என்றும் முஷரப் குறிப்பிட்டார்.
