டெல்லியில் நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அரசின் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக்கிற்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. 49வயதான தீபா மாலிக், இந்த விருதை அதிக வயதில் பெறும் நபர் ஆவார். விருதுடன் பாராட்டு பட்டயமும், ஏழரை லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.
கேல்ரத்னா விருது அறிவிக்கப்பட்ட மற்றொரு வீரரான பஜ்ரங் பூனியா, உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியை முன்னிட்ட ரஷ்யாவில் பயிற்சி மேற்கொண்டு வருவதால், விருது விழாவில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.
அவருக்கு வேறு ஒரு நாளில் விருது வழங்கப்படும். தமிழக பாடி பில்டிங் வீரர் பாஸ்கரன், தமிழ் தலைவாஸ் கபடி அணியின் கேப்டன் அஜய் தாகூர் உள்ளிட்டோர் அர்ஜுனா விருதை பெற்றனர். அர்ஜுனா, மற்றும் துரோணாச்சார்யா, தயான்சந்த் விருதுகளுக்கு பாராட்டு பட்டயத்துடன் தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.
