புதுடெல்லி: 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்தது.
இதையடுத்து, இந்த வாரமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. எடப்பாடி அரசு எதிராக பேரவையில் ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.
எனவே, ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
