மும்பையின் கணபதி சதுர்த்தி நாளை முதல் 10 நாட்களுக்கு கொண்டாடப்படுவதை முன்னிட்டு 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் நிலவும் நிலையில் பலலட்சம் மக்கள் திரள்கிற மதவிழாக்கள் மிகுந்த கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு எந்த இடையூறும் நேராத வகையிலும் போக்குவரத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு நிகழாத வகையிலும் மும்பை போலீசார் தீவிரமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
போலீசார் மட்டுமின்றி உளவுத்துறை, அதிரடிப் படை,கமாண்டோ படை உள்ளிட்ட இதர துறைகளின் உதவியும் நாடப்பட்டுள்ளது. மும்பையில் சுமார் ஒரு லட்சத்து 62 ஆயிரம் பந்தல்கள் அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கடலில் விநாயகரை கரைப்பதற்காக 129 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
